இரண்டாவது வாரத்தில் அப்படியே படுத்த மங்காத்தா..போச்சா

Ajith Kumar Trisha Yuvan Shankar Raja Venkat Prabhu Box office
By Tony Jan 31, 2026 02:30 AM GMT
Report

மங்காத்தா

மங்காத்தா தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களில் மிக முக்கியமான படம். ஒரு நாயகன் படம் முழுவதும் வில்லனாகவே வந்து அசத்தியது, அதிலும் எந்த ஒரு ஹீரோ கேரக்டரும் படத்தில் இல்லாதது வில்லனுக்கு பளாஷ்பேக் இல்லாதது என பல தனித்துவமான அம்சங்கள் இந்த படத்தில் இருக்கும்.

இந்நிலையில் மங்காத்தா ரிலிஸ் ஆகி முதல் 4 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ 15 கோடி வரை வசூல் செய்திருந்தது. ஆனால், அதை தொடர்ந்து வசூல் மெல்ல குறைய ஆரம்பித்தது.

இரண்டாவது வாரத்தில் அப்படியே படுத்த மங்காத்தா..போச்சா | Mankatha Rerelease Box Office

பிறகு இரண்டாவது வாரத்தில் பெரிய அளவில் திரையரங்கு எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆம், முதல் வாரத்தில் 800 ஷோக்க்கள் ஓடிய மங்காத்தா இந்த வாரம் வெறும் 250 ஷோக்கள் மட்டுமே ஓடுகிறது.

இதனால், மங்காத்தா வசூல் இனி பெரிய அளவில் வர வாய்ப்பு இல்லை, அதோடு வார நாட்களில் இப்படத்தின் வசூல் மிக மந்தமாக இருந்ததும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.