ஏப்ரல் Foolன்னு சொல்ல நாங்க தான் கிடைச்சோமா! அசோக் செல்வனின் மன்மத லீலையால் கோபத்தில் ரசிகர்கள்..

venkatprabhu manmatha leelai ashokselvan
By Edward Apr 01, 2022 01:05 PM GMT
Report

நடிகர் சிம்புவின் மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் மன்மதலீலை. தன்னுடைய உதவி இயக்குனரின் கதையை எடுத்து இயக்கும் வெங்கட் பிரபு மாநாடு படத்திற்கு முன்பே இதன் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார்.

அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அண்டர் 18ஸ் பார்க்கக்கூடாத அடல்ட் படமாக உருவாகியுள்ளது. படடத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை பெற்றது.

இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் முதல் காட்சியை ரத்து செய்துள்ளனர். பார்க்க வந்த ரசிகர்களுக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பைனான்ஸ் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டதால் தான் முதல் காட்சியை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு மன்மத லீலை படத்தில் மதியம் 2 மணி காட்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சிம்புவும் மாநாடு படத்தின் போது கூட இந்த மாதிரியாக பிரச்சனையை வெங்கட் பிரபு சந்தித்திருக்கிறார். ஏப்ரல் பூஃல் ஆக்கிவிட்டார்களே என்று முதல் காட்சியை புக் செய்த ரசிகர்கள் புலம்பியுள்ளனர்.