2 வருஷம் படுத்தபடுக்கையில் தான்!! மரணத்திற்கு முன் டாக்டர் சொன்னதால் அதிர்ந்து போன மனோபாலாவின் மகன்
தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இயக்குனராக ஒருசில படங்களை இயக்கியும் இருப்பவர் மனோபாலா. சில நாட்களுக்கு முன் மனோபாலா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த விசயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முன்னதாக கல்லீரல் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார் மனோபாலா.
படுத்த படுக்கையில் இரு ஆண்டுகள்
மனைவி உடனிருந்து கவனித்து கொண்டு வந்தபோது மனோபாலாவின் மகன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெர்ஃபிக்காவில் இருந்து இந்தியா திரும்பி இருந்தார். மகன் வருவதற்கு முன் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மனோபாலாவை சந்தித்து பார்த்து வந்த நிலையில், அதன்பின் யாரையும் பார்க்கவிடாமல் இருந்துள்ளார் மனோபாலாவின் மகன்.
ஏனென்றால் அப்பாவுக்கு இன்பெக் ஷன் ஆகிவிடும் என்பதால் தான் அதையெல்லாம் தவிர்த்திருக்கிறார்கள். இந்நிலையில் மனோபாலாவை பரிசோதித்த மருத்துவர், இரு ஆண்டுகள் படுத்தபடுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வருவார் என்றும் படுக்கையிலேயே தான் சாப்பாட்டு துவங்கி அனைத்தும் இனி படுக்கையில் தான் என்று கூறியிருந்தார்.
இறப்பு சான்றிதழ்
ஆனால் அவர் கூறிய இரு நாட்களில் மனோபாலா மரணமடைந்தது மனோபாலாவின் மகன் மற்றும் மனைவிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கணையத்தில் ஏற்பட்ட தொற்றுக்காக மருந்துகள் சாப்பிட்டு வந்த மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
திடீரென மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர் ஆனந்த குமார் என்பவர் சான்றிதழ் வழங்கியிருக்கிறாராம். இன்னும் சில நாட்களில் மனோபாலாவின் மனைவியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார் அவரது மகன்.