வா வா ராத்திரிக்கு ரா ரா!! நடிகை தமன்னா குத்தாட்டத்தை கலாய்த்த மன்சூர் அலிகான்..
தமிழ் சினிமாவில் முரட்டு வில்லனாக திகழ்ந்த நடிகர் மன்சூர் அலிகான் தற்போது காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். நடிகர் விஜய்யின் லியோ படத்தில் அவருடன் இணைந்த பல காட்சிகளில் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஜெயிலர் படத்தை பற்றி கேவலமான விமர்சித்திருக்கிறார். ஏற்கனவே படவிழா ஒன்றில் படம் ஓரளவிற்கு தான் இருக்கு, அனிருத்தின் இசை தான் படத்தை தூக்கியது என்றும் கூறியிருந்தார்.
தற்போது காவாலா பாட்டை எப்படி அனுமதிச்சாங்க, வரிகளே வா வா ராத்திரிக்கு ரா ரா-ன்னு இருக்கு.
மோசமான மூவ்மெண்ட், அதை மட்டுமே காண்பித்தார்களா இல்லை? அந்த ஒரு பாட்டை வெச்சுய் தான் படமே ஓடுச்சு என்றும் மத்தபடி ஒரு வெங்காயமும் அந்த படத்தில் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் என்னால்
இத பண முடியாதா? தமன்னா இல்லன்னா கமன்னாவ
வெச்சு 10 லட்சம் கொடுத்து ஆட வைக்க முடியாதா?
பெரிய ஆள் வயசாகி நடிச்சா அதை அனுமதிப்பாங்க,
நானும் கவர்ச்சியா எடுக்கவா என்று படுமோசமாக
கலாய்த்து பேசியிருக்கிறார்.