திரிஷா உடன் பெட்ரூம்.. மன்சூர் அலி கான் எதிராக போர் கொடி தூக்கும் பிரபலங்கள்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலி கான், நடிகை திரிஷாவை கொச்சையாக பேசி இருந்தார்.
இவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் த்ரிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில், ”மன்சூர் அலி கானின் இந்த பேச்சு அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு பெண்களுக்கு எதிரான பேச்சு. இந்த மாதிரியான ஆட்கள் உடன் நடிக்க மாட்டேன் என்று திரிஷா பதிவிட்டு இருந்தார். திரிஷாவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்த மன்சூர் அலி கான், பழைய படங்கள் மாதிரி ஹீரோயின்கள் உடன் நடிக்க வாய்ப்பு இப்போது இல்லை அந்த விஷயத்தை நான் காமெடியாக சொன்னேன்.
நான் பேசியதை கட் செய்து கலகம் செய்ய நினைத்தால், நான் அந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? நான் திரிஷாவை தவறாக பேசவில்லை. உண்மையில் அவர்களை நான் உயர்வாக தான் பேசி இருந்தேன் என்று மன்சூர் அலி கான் விளக்கம் அளித்துள்ளார்.