சும்மா இருந்த மனுஷன வைரலாக்கிட்டியே லோகி! நடிகையை குறித்து மன்சூர் அலிகான் பேசிய வீடியோ

Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Jun 15, 2022 05:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 80, 90 களில் வில்லனுக்கென்றே ஏத்த முகத்தோற்றத்தில் காணப்பட்டு பல படங்களில் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

இடையில் அரசியல் சர்ச்சையான பேச்சினால் வாய்ப்பினை இழந்து வருகிறார் மன்சூர். அவர் பேட்டியில் பேசும் பேச்சு சர்ச்சையாகிரதோ இல்லையோ வைரலாகி சிரிக்கத்தான் வைக்கிறது.. அப்படி விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் பற்றி ஒரு விசயத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கைதி படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று தான் இருந்தோம். ஏன்னா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய ஆட்டிடியூட் ரொம்ப பிடிக்கும். அவருடைய இன்டர்வியூ ஆட்டிடியூட் பார்த்தேன். ஆங்கர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

ஆனால், இவர் ஒரு மரத்திலிருந்து இலையைப் பறித்து பிபி ஊதி இருந்தார். நிஜமாகவே யாரும் இந்த மாதிரி பண்ணி இருக்கவே மாட்டார்கள். அதை பார்த்து நான் வியந்து விட்டேன். எப்படியாவது அவரை படத்தில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு ப்ரீ பிரமோஷன் செய்தது போல் அவரின் வீடியோக்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.