இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கினாரா மன்சூர் அலி கான்.. 7 ஆண்டுகள் சிறை தண்டனை!!
சமீபத்தில் திரிஷா எதிரான அவதூறு பேச்சுக்கு மன்சூர் அலி கான் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த விஷயம் தான் சினிமா வட்டாரங்களில் ஹாட்டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு மன்சூர் அலி கணை பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை பற்றி தற்போது பார்க்கலாம்.
கடந்த 1996 -ம் ஆண்டு சினேகா ஷர்மா என்ற 23 வயதான பெண் ஒருவர், "நடிகர் மன்சூர் அலி கான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று புகார் முன் வைத்தார். சினேகா ஷர்மா மன்சூர் அலிகானின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புகாரில், நடிகர் மன்சூர் அலி கான் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டார். ஒரு நாள் குளிர்பானத்தில் எனக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார். மேலும் என்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று மன்சூர் அலிகான் மீது குற்றம்சாட்டினார்.
கடந்த 1998 -ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த சமயத்தில் வழக்கு கொடுத்திருந்த சினேகா ஷர்மாவிற்கு குழந்தை ஒன்று பிறந்தது.
இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அடுத்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனை அடுத்து மன்சூர் அலி கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் சினேகா ஷர்மாவிற்கு ரூ. 3.5 லட்சமும், குழந்தைக்கு ரூ. 7 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கில் திருப்பங்கள்
திரைப்படங்களில் வருவது போன்று இந்த வழக்கிலும் திருப்பங்கள் இருந்தது. கடந்த 1995 -ம் ஆண்டு சினேகா ஷர்மா மீது சிவசுரேஷ் என்பவர் வழக்கு ஒன்றை தொடுத்தார்.
அந்த வழக்கில், "'சினேகா ஷர்மாவிற்கும் தனக்கும் குழந்தை பிறந்துவிட்டது எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்" என சிவசுரேஷ் வழக்கு கொடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தை கண்டுபிடித்துள்ளார் மன்சூர் அலி கானின் வழக்கறிஞர்.
பின்னர் மன்சூர் அலி கான் சினேகா ஷர்மா மீது வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், "சினேகா ஷர்மா கன்னி பெண் என்று தனக்கு எதிரான வழக்கில் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது".
"என் மது அவமதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை சினேகா ஷர்மா தொடுத்துள்ளார். மேலும் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய சினேகா ஷர்மா தனக்கு ரூ. 50 லட்சம் கொடுக்க வேண்டும்" என்று மனுதாக்கல் செய்து உள்ளார்.
ஆனால் கடைசி வரை சினேகா ஷர்மா இது பற்றி எந்த ஒரு பதிலும் முன் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.