அந்த காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு நடிகருக்கு கிஸ் பண்ண நடிகை!! உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

Udhayanidhi Stalin Vadivelu Mari Selvaraj Actress Maamannan
By Edward Jul 10, 2023 04:25 AM GMT
Report

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் மாமன்னன். கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான மாமன்னன் படம் கலவையான விமர்சனம் பெற்று வந்த நிலையில் படக்குழுவினர் சக்சஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசியனர்.

அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், படத்தில் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரவீனா ரவி பற்றிய ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ரவீனா ரவி முதல் எனக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று தெரியாது.

அந்த காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு நடிகருக்கு கிஸ் பண்ண நடிகை!! உண்மையை உடைத்த பிரபல இயக்குனர் | Mari Selvaraj Open Raveena Ravi Doing Kiss Fahath

சேலத்து பொண்ணு மாதிரி இருக்காங்க என்று என் மனைவி சொன்னாங்க. அப்படி ஒரு முக்கியமான முகம் எனக்கு தேவைப்பட்டதால் ரவீனா ரவி தேர்வு செய்தேன். ஒரு காட்சியில் பகத் பாசிலை கட்டியணைத்து பின் செல்லனும்.

அப்போது கட்டிபிடித்து முடித்த போது பகத், சட்டையில் லிப் ஸ்ட்ரிக் ஒட்டி இருந்தது. எப்படி நடந்துச்சி என்று கேட்டதற்கு நான் பண்ணல தானாவே நடந்துச்சின்னு ரவீனா ரவி கூறியதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். பின் அதை சிஜி-யில் எடிட் செய்தேன் என்று மாரி செல்வராஜ் காமெடியாக தெரிவித்துள்ளார்.