அந்த பொண்ணுக்கு நம்பர் கொடுத்தது நான் தான்!! உண்மையை கூறிய சீரியல் நடிகர்..

Gossip Today
By Edward Mar 03, 2023 09:27 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டு நடிப்பு, இயக்கம் என்று இருந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார் நடிகர் மாரிமுத்து.

சமீபத்தில் மாரிமுத்துவிடம் 18 பிளஸ் கண்டெண்ட் பதிவிடும் டிவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பெண்ண மாரிமுத்துவிடம் நான் கால் செய்யலாமா என்று பதிவிடப்பட்டது. அதற்கு மாரிமுத்துவும் எஸ் என்று கூறியதோடு அவரது மொபைல் நம்பரையும் பகிர்ந்துள்ளார்.

இந்த விசயம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து மாரிமுத்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஆமாம் நான் தான் ஒரு பெண்ணுக்கு நம்பர் கொடுத்தேன்.

இயக்குனர், நடிகராக இருக்கும் நான் ஒரு பெண்ணுக்கு நம்பர் கொடுத்தது என்ன தவறு. என் நம்பரை கொடுப்பதற்கு எனக்கு உரிமை இருப்பதாகவும் அந்த பெண் கேட்டதால் தான் நம்பர் கொடுத்தேன் என்றும் கூறியதோடு அவரது நம்பரையும் கூறியுள்ளார். மேலும் நான் பூமர் அங்கிள் கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.