திருமணத்துக்கு ஆடையில்லாமலே வரலாம்ல? சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர் மாரிமுத்து.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் இயக்குனராகவும் பண்யாற்றி வந்தவர் நடிகர் மாரிமுத்து. அஜித்தின் ஆசைபடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி, உதயா, பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
தற்போது பிரபல தொலைகாட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்திய திருமண எபிசோட்டில் புகைப்படக் கலைஞர்களை இழிவுப்படுத்தும் வண்ணம் காட்சிகள் அமைந்துள்ளதாக வீடியோக்களை பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சீரியல் காட்சிகள் குறித்து பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மாரிமுத்து. திருமணத்தின் போது மணப்பெண் ஏன் நடனமாடுகிறார் என ஆரம்பித்த மாரிமுத்து கல்யாணத்துல யார் வேண்டுமானாலும் ஆடலாம் மணப்பெண் ஆடக்கூடாது.
அப்படி ஆடினால் அவள் மணப்பெண்ணாகவே இருக்க மாட்டாள். ஏன் ஆடை போட்டுக்கொண்டு மணவரையில் உட்கார வேண்டும் எதுவும் இல்லாமல் கூட வரலாமே என்று கூறியுள்ளார்.
ஒரு பெண் ஆண் நிழலில் நடந்தால் தான் அழகு அதற்கு மேல் போகக்கூடாது என்று கூறியுள்ளார். இப்படியொரு ஆண் ஆதிக்கவாதியை எப்படி சகித்துக்கொள்வது என்று பலர் அவரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
இவங்கெல்லாம் Actor, Director..
— TeaKadaiBench (@ShriTwitz) April 8, 2022
எப்படி இப்படி பேச முடியுது?#misogyny #ஆணாதிக்கம் #fun #ParundhuMedia #ShriTwitz #ParundhuNews #Tamil #rtitBot #Tamilnadu #Parundhu
@Parundhu_Media@iDharun7_0@TamilArivai pic.twitter.com/ecHQiVbO18