காணாமல் போன நடிகை ஹீராவுடன் காதல் தோல்வி!! மன உளைச்சலில் இருந்த நடிகர் அஜித்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் அஜித் பல நடிகைகளுடன் ரகசிய காதலில் இருந்து அதன்பின் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் டாப் இடத்தில் இருந்து தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்தின் ஆரம்பகாலக் கட்டத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஹீரா மீது அளவுக் கடந்த காதலில் இருந்து வந்தார். அப்போது திருமண வரை சென்று பின் பிரேக்கப் செய்தார். இதனால் மன அழுத்தத்தில் சில காலம் சினிமாவில் கமிட்டாகுவதை நிறுத்திவிட்டார். அப்படி வேண்டாம் என்று ஒதுக்கிய படத்தில் ஒன்றுதான் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான நேருக்கு நேர்.
இப்படத்தில் அஜித் நடிக்காமல் போன காரணம் குறித்து அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜி மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு மறைந்த மாரிமுத்து, அஜித் பற்றிய சில தகவல்களை சில பேட்டிகளில் பகிந்து வந்தார்.
நேருக்கு நேர் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் வசந்த், அஜித்திடம் தான் கேட்டார். அப்போது, அஜித் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளில் இருந்தார்.
அதாவது நடிகை ஹீராவுடன் காதலில் இருந்து தோல்வியை சந்தித்த போது மன அழுத்தத்தில் இருந்ததால் சில காட்சிகள் நடித்தும் அதன்பின்தான் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அஜித் என்று மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
அதன்பின் பிரசாந்த், பிரபுதேவாவிடம் கேட்டும் அவர்கள் வேண்டாம் என்று கூறியப்பின் சூர்யாவை நடிக்க கமிட் செய்தோம் என்று மறைந்த நடிகர் மாரிமுத்து அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.