பொம்பள சோக்கு கேக்குதா-ன்னு கேட்ட எஸ் ஜே சூர்யா!! ஷாக் கொடுத்த விஷாலின் மார்க் ஆண்டனி..
Vishal
S.J.Suryah
Mark Antony
By Edward
நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. பல ஃபிளாப் படங்களுக்கு பின் விஷால் நம்பி இருக்கும் படம் மார்க் ஆண்டனி.
ஜிவி இசையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் செப்டம்பர் 15-ல் வெளியாகவுள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நான் வில்லன் எப்போதும் வில்லனாக இருப்பேன் என்ற விஷாலின் மாஸ் டயலாக்கிலும் பொம்பள சோக்கு கேக்குதான்னு எஸ் ஜே சூர்யா கூறி சுடும் டயலாக்கும் சில்க் ஸ்மிதாவை அச்சு அசல் உரித்து வைத்த நடிகையின் லுக்கும் டிரைலரை சிறப்பாக கொண்டு சேர்த்துள்ளது.
டைம் டிராவல் கதை போல் டிரைலரில் காட்டியிருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக அமையும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.