ரூ. 18.5 லட்சம் கோடி சொத்து மதிப்பு!! ரூ. 196 கோடிக்கு வசந்த மாளிகை வாங்கிய டாப் கோடீஸ்வரர்...
Facebook
Businessman
Mark Zuckerberg
Washington
By Edward
மார்க் ஜூக்கர்பர்க்
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் மார்க் ஜூக்கர்பர்க் 2025 ஆம் ஆண்டில் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தினை பிடித்திருக்கிறார்.
215 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ள மார்க் ஜூக்கர்பர்க், விலையுயர்ந்த பங்களாவை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.
வசந்த மாளிகை
அப்படி வாஷிங்டன், டிசியில் 15 ஆயிரம் சதுரடி கொண்ட ஒரு மாளிகையை வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 196 கோடி ரூபாய்க்கு அந்த டிசி மேன்ஷனை பணமாகவே செலுத்தி வாங்கியிருக்கிறார்.
இது வாஷிங்டன் நகர வரலாற்றில் 3வது விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக கருதப்படுகிறதாம். ஏற்கனவே மார்க் ஜூக்கர்பர்க் 270 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வீட்டில் குடியிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.