நம்ம ஆபிஸ் லக்‌ஷ்மியின் குழந்தையா இது? ஈழத்து பெண் நடிகை மதுமிளாவின் புகைப்படம்..

tamil actress serial
By Jon Jan 31, 2021 07:34 PM GMT
Report

தொலைக்காட்சி சீரியல் மூலம் பலர் பிரபலங்களாக மாறி சினிமா வாய்ப்பினை பெற்று வருவார்கள். அந்தவகையில் சில வருடங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது ஆபிஸ் சிரீயல்.

ஆபிஸ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மதுமிளா. இலங்கை யாழ்பாணத்தில் பிறந்து இலங்கை பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபல சீரியல் ஆபிஸில் லக்சுமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதையடுத்து பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், செஞ்சிட்டாளே என் காதல, சங்கிலி புங்கிலி கதவதொர என்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு பெலிக்ஸ் ஜேம்ஸ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாகி கனடாவில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த புகைப்படம் இணையத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டார். தற்போது குழ்ந்தை வளர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.