ஆஸ்திரேலியாவுக்கு சம்மட்டி அடி!! மேத்யூ ஹைடன் மானத்தை காத்த இங்கிலாந்து வீரர்!!
ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான ஜோ ரூட்டின் நீண்டகால காத்திருப்பு தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், இந்த ஆஸிஸ் தொடரில் ஜோ ரூட் சதமடிக்கவில்லை என்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று சபதம் எடுத்தார்.

இதனையடுத்து ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதமடிக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் ஹைடனின் அந்த சபதத்தை தங்களால் பார்க்க முடியாது என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆஷஸ் 2025 தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. தற்போது இன்று 2வது டெஸ்ட் போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மேத்யூ ஹைடன்
முதலில் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் நிதானமாக விளையாடிய நிலையில் ஜோ ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து விளையாடி வருகிறார்.
இதன்மூலம் மேத்யூ ஹைடனின் நிர்வாண சபதம் முடிவுக்கு வந்துள்ளது. மேத்யூ ஹைடனின் மானத்தை காத்த ஜோ ரூட் என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஜோ ரூட்டின் இந்த சதத்திற்கு வாழ்த்துக்களும் தான் தப்பித்துவிட்டேன் என்ற ரியாக்ஷனை மேத்யூ ஹைடன் கொடுத்துள்ளார்.