கண்ட இடங்களில் தொட்டார், படுக்கையறையில் மோசமா நடந்துக்கொண்டார்..பிக் பாஸ் போட்டியாளர் மாயா மீது பரப்பரப்பு புகார்
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. பிக் பாஸ்ஸில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் மாயா கிருஷ்ணன்.
இந்நிலையில், 2018ல் மாடல் அழகி அனன்யா என்பவர் மாயா கிருஷ்ணன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில், "மாயா கிருஷ்ணனை 2016ஆம் ஆண்டு முதன்முறையாக சந்தித்தேன். எனக்கு அப்போது 18 வயதுதான். அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.
ஒருகட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழகினோம்.அந்த சமயத்தில் நான் அவருடன் மட்டும்தான் பழக வேண்டும் என்ற ரீதியில் நடந்துகொள்ள ஆரம்பித்தார். என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். மேலும் பாலியால் ரீதியாகவும் பயன்படுத்தினார் என்று மாயா கிருஷ்ணன் மீது பாலியல் புகார் கொடுத்தார்.
ஆனால் இதற்கு மாயா, இந்த செய்தி முற்றிலும் பொய் நான் அப்படி எல்லாம் நடந்துகொள்ளவில்லை என்று பதில் அளித்தார். இந்த விஷயம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும், தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.