என் கணவருக்கு நான் அதை செய்தேன், இதில் என்ன இருக்கிறது... மீனா அதிரடி
Meena
By Yathrika
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். தில்லானா தில்லானா என்ற பாடலில் நடனம் ஆடி அனைவரையும் சொக்க வைத்தவர், நிறைய வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார்.
இப்போது தரமான கதையுள்ள படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தலைக்காட்டி வருகிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை மீனா பேசும்போது, எனது கணவர் இறப்பின் போது அந்த நேரத்தில் என்னை சுற்றி என்ன நடக்கிறது, யார் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை.
அவர் என்னுடைய கணவர் அவருக்கு நான் இறுதி சடங்குகளை செய்கிறேன் இதில் யாருக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியவில்லை. என் மனத்திற்கு சரி என்று பட்டதை நான் செய்தேன் என அதிரடியாக பேசியுள்ளார்.