எனக்கு இதுதான் பிடிக்கும்.. கணவர் மறைவுக்கு பின் ரகசியத்தை கூறிய நடிகை மீனா..

Meena Indian Actress
By Edward Sep 17, 2022 08:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை மீனா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் இப்போது அண்ணி, மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் அதிகமாக மலையாளத்தில் தான் படங்கள் நடிக்கிறார். சமீபத்தில் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார், இது ரசிகர்களுக்கு பெரும் துக்கத்தை கொடுத்தது.

இதன்பின் அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்த மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து தோழிகளுடன் மகளுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் பல ஆண்டு உண்மை ஒன்றினை வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை மீனா.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பேன் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. நான் சினிமா பின்னணியுள்ள குடும்பத்தை சேர்ந்தவள் கிடையாது.

சினிமாவை ஆரம்பிக்க காரணம் என் அம்மா தான். அவர்தான் எல்லாமே பார்த்து வந்தார். எனக்கு கிளாமர் ரோலில் நடிக்க ரொம்ப பிடிக்கும்.

ஆனால் எனக்கு குடும்ப கதாபாத்திரமே அதிகமாக கிடைத்தது. தாவணி, சேலை உடைகளை தான் தருவார்கள். அப்படியிருக்கையில் கிளாமர் நடிகைகளை பார்த்தால் எனக்கு கோபமாக வரும் என்று கூறியுள்ளார் மீனா.

Gallery