கணவர் மரணத்திற்கு இதுதான் காரணம்.. பல மாதம் கழித்து உண்மையை கூறிய நடிகை மீனா..

Meena Indian Actress
By Edward Oct 21, 2022 09:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானார். அதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் குழந்தையாகவும் நடித்தும் அவருக்கு ஜோடியாக நடித்தும் இருக்கிறார்.

மீனாவின் கணவர்

அப்படி முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன்பின் குணச்சித்திர ரோலிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியளித்தது. இதற்கான காரணம் என்ன என்று பல மாதம் கழித்து நடிகை மீனா பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

அவரின் மரணம் திடீரென நடந்த ஒன்று. எதிர்பாராத சம்பவம் அது. நினைத்ததற்கு நேர் எதிராக நடந்துவிட்டது என்றும் தன் அம்மாவின் துணிச்சல் தன் தன்னை இந்த அளவிற்கு தைரியத்தை கொடுத்து இப்போது பேட்டி கொடுக்கும் அளவிக்கு மாற்றி இருக்கிறது. கணவர் இறந்து அதிலிருந்து மீண்டு வர காரணமே என் குடும்பத்தினரும் நண்பர்களும் தான்.

காரணம்

மேலும் எனது கணவருக்கு ஸ்பால் லைட் என்றாலே பிடிக்காது என்றும் அவர் பெங்களூர் அப்பார்ட்மெண்ட்டில் தங்கி இருந்த இடத்திற்கு பக்கம் புறாக்கள் இருந்ததாகவும் அதன் எச்சத்தால் ஏற்பட்ட தொற்றால் தான் வித்யாசாகரின் நுரையீரல் பாதிப்பு காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜனவரில் தங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. அதன் தொற்று நுரையீரலிலும் வித்யாசாகருக்கு இருந்ததால் அவர் மரணம் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை மீனா.