13 வயதில் 40 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! முதல் படத்திலேயே இப்படியா.. நடிகை மீனா கூறிய உண்மை..

Rajkiran Meena
By Edward Mar 09, 2023 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி, ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அடுத்தடுத்த படங்களில் அறிமுகமாகி நடித்டு வந்தார் மீனா.

அதன்பின் 1990ல் நவயுகம் என்ற படத்தின் மூலம் 12 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் பிளாப்பான பின் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ் கிரண் அவர்களின் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தில் 13 வயதில் நடித்து பிரபலமானார் நடிகை மீனா.

13 வயதில் 40 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! முதல் படத்திலேயே இப்படியா.. நடிகை மீனா கூறிய உண்மை.. | Meena Share 40 Age Old Actor Act With 13 Year Time

அப்படத்தினை பற்றி சமீபத்தில் நடிகை சுஹாசினி மணிரத்னம் எடுத்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு பகிர்ந்துள்ளார்.

13 வயதாக இருக்கும் போது இந்த மேக்கப் போட்டால் நன்றாக இருக்கும் என்று போல்ட்டாக கூறினேன். அதுவும் நான் அமைதியான பெண் அதிகமாக பேசமாட்டேன். அப்படி இருக்கும் போது சோலையம்மாள் கதாபாத்திரம்,எனக்கு எதுவும் தெரியாது.

யார் தயாரிப்பாளர், நடிகர் என்று எனக்கு தெரியாது. அந்த ரோலில் நடிக்க பல நடிகைகள் வேண்டாம் என்று கூறினார்கள். அதன்பின் நான் நடித்தேன் என்று மீனா கூறியுள்ளார்.

அப்போது மீனா 1 3 வயதில் இருக்கும் போது ராஜ் கிரணுக்கு கிட்டத்தட்ட 40 வயது இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனா.