உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.. கணவர் மரணம் பற்றிய செய்தியால் கொந்தளித்த மீனா!
Meena
By Parthiban.A
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் . அவருக்கு வயது 48. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார், lungs infection தான் மரணத்திற்கு காரணம் என்றெல்லாம் செய்திகள் பரவியது.
இந்நிலையில் கணவர் மரணம் பற்றி எந்த தவறான செய்தியையும் பரப்பாதீங்க என நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் எங்கள் privacyக்கு மதிப்பளியுங்கள் என மீடியாவை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் தனது கணவர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் உதவிய பலருக்கும் அவர் நன்றி கூறி இருக்கிறார். மீனாவின் அறிக்கை இதோ..