விஜய் GOAT படத்தில் ஏன் நடித்தேன்..ஒருவாரம் மன அழுத்தம்!! நடிகை மீனாட்சி சவுத்ரி..
மீனாட்சி சவுத்ரி
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து, விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதை தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் நடிகர் துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய்யுடன் கோட் படத்தில் நடித்ததால் பலர் என்னை கேலி, கிண்டல் செய்தனர். இணையத்தில் வந்த ட்ரோல்களால் ஒருவாரம் மன அழுத்தத்தில் இருந்தேன்.
ஆனால்
துல்கர் சல்மானுடன் நடித்த லக்கி
பாஸ்கர் படத்தைப் பார்த்துவிட்டு
பலர் பாராட்டினர். அப்போதுதான்
இனி நல்ல கதையம்சம் உள்ள
கதைகளை தேர்வு செய்யவேண்டும்
என்று முடிவெடுத்தேன் என்று
கூறியிருக்கிறார்.