என்னை டார்ச்சர் செய்கிறார்கள்! பிரசாந்த் படத்தில் அட்டூழியம் செய்த நடிகை நிலா..

Prashanth
By Edward May 17, 2022 12:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் விஜய், அஜித் முன்னணி நடிகர்களாவதற்கு முன்பே மிகப்பெரிய ஸ்டாராக இருந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சி என்ற படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

கடைசியான அவர் நடித்த வின்னர் படம் தான் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பின் சில காரணங்களால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின் ரீஎண்ட்ரி கொடுக்கும் வண்ணன் தற்போது அந்தகன் படத்தில் அப்பா தியாகராஜன் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரசாந்த், மீரா சோப்ரா, மேக்னா நாயுடு, விவேக் நடிப்பில் இயக்குனர் நந்தகுமார் இயக்கிய படம் ஜாம்பவான். 2006ல் வெளியான இப்படத்தின் சில சர்ச்சையான சம்பவத்தை இயக்குனர் நந்தகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அப்படத்தின் போது பிரசாந்திற்கு முதுகில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிவதை கூட பொருட்படுத்தாமல் பிரசாந்த் அப்படத்தில் நடித்து கொடுத்தார். ஆனால் கதாநாயகியாக நடித்த மிரா நாயுடு ரொம்பவம் வெறுப்பேற்றும் படியாக நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாம்.

குற்றாலம் பக்கத்தில் இருக்கும் நீர் தொட்டியில் பிரசாந்த், மிரா குளிக்கும் காட்சி எடுக்க இருந்தது. தொட்டித்தண்ணீரை பார்த்த மீரா சோப்ரா என்னால் இந்த தண்ணீரில் குளிக்க முடியாது. அலர்ஜி வந்துவிடும் என்று தெரிவித்ததோடு மினரல் வாட்டரை நிரப்புங்கள் என்று கூறினார்.

அப்படி அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் 20 ஆயிரம் லிட்டர் பிடிக்கும். ஆனால் அப்போதைக்கு அது முடியாத காரியமாக இருந்தது. இதனால் என்னால் நடிக்க முடியாது என்று அடம்பிடித்து ஷூட்டிங்கில் இருந்து சென்று விட்டார்.

இதனால் வேறொரு நடிகையை வைத்து எடுக்கலாம் என்றால் அதற்கு வேறொரு படமே எடுக்கும் அளவிற்கு செலவாகிவிட்டது. இந்த பொண்ணு ஏன் இப்படி செய்யுது, ஐஸ்வர்யா ராய் கூட இப்படி நடந்துக்க மாட்டாங்க என்று விவேக் கூறினார்.

இதன்பின் தயாரிப்பாளர், நாங்கள் எல்லோரும் இதுபற்றி பேசியதற்கு டார்ச்சர் செய்கிறார்கள், என்னை கார்னர் செய்கிறார்கள் என்று பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி டெல்லிக்கே சென்று விட்டார்.

உடனே பிரசாந்தின் அப்பா தியாகராஜன் மீராவிடம் சென்று பேசினார். அதற்கு நடிகை மீரா சோப்ரா சரி என கூறி, தமிழ்நாட்டில் நான் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்தார். வேறு வழியின்றி வெளிநாட்டில் பாடல்கள் எல்லாம் ஹூட் எடுத்து படத்தினை முடித்து வெளியிட்டோம் என்று கூறியுள்ளார் நந்தகுமார்.