அந்த நடிகருடன் நட்பு! வாய்ப்பில்லாத சினிமாவை விட்டு விலகும் 40 வயது நடிகை
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின் நடித்த படங்கள் அதன்பின் தோல்விகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார். பின் 2014ல் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் 'டெஸ்ட்' படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாராவோடு நடிகை மீரா ஜாஸ்மினும் இணைந்துள்ளார்.
மேலும் விமானம் மற்றும் குயின் எலிசபெத் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். ஆரம்பத்தில் கிளாமரே காட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது 41 வயதாகிய நிலையில் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வரும் மீரா ஜாஸ்மின் தற்போது நடிப்பில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
தனது தனிப்பட்ட வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருக்கலாம் என்றும் பின் பிடித்த படங்களில் நடிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளாராம்.
இது தொடர்பான எனது சமுகவலைதள பக்கத்தில் வெளியிடும் படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து நேர்மறையாக கருத்து வருகிறது என்றும் பின் தொடர்பவர்களுக்கு இதை பகிர்வது சமுகவலைத்தளம் உதவிகரமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சமந்தா மயோசிடிஸ் சிகிச்சைக்காக சிலகாலம் விலகி இருக்க முடிவெடுத்ததை தொடர்ந்து நடிகை மீரா ஜாஸ்மின் ரீஎண்ட்ரி கொடுத்த சில வருடங்களில் விலகவுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே நடிகர் நரேனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் மீரா ஜாஸ்மீன். இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.