40 வயதில் இப்படியொரு போட்டோஷூட்டா.. ரசிகர்களை மயக்கிய மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள்
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து சண்டை கோழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து கொண்டிருந்தார்.
நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திய நடிகை மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் 7 வருடங்கள் கழித்து படங்களில் நடிக்க வந்துள்ளார்.
மேலும், ரசிகர்களை கவரும் வண்ணம் சில போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..
