வாழ்க்கையை புரட்டி போட்ட இரண்டு பேர்! மீரா ஜாஸ்மின் எப்படி இருக்காங்க..

tamilactress meerajasmine
By Edward Jan 20, 2022 07:05 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 2000களில் கொடிக்கட்டி பறந்த சில நடிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அந்தவகையில், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மீன்.

துறுதுறு நடிப்பால் அனைத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். 2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

திடீரென 2011ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கை 2016ஆம் ஆண்டு வாய்த் தகராறு காரணமாக விவாகரத்து வரை சென்றது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக மீரா ஜாஸ்மின் தரப்பில் கூறப்பட்டது. 39 வயதைத் தொட்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பேட்டிகளில் கூறி வந்தார்.

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக நண்பர்களிடம் கூறி விட்டு தீவிர உடற்பயிற்சியில் இறங்கி ரீஎண்ட்ரி கொடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்து வரும் படத்தின் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்த மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்கிராம் பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.