மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ
தமிழ் சினிமாவிற்கு ஒரு இண்டிபெண்டென்ட் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் மீசைய முறுக்கு 2. இப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், சைத்ரா அச்சர் மற்றும் கெத்திகா ஷர்மா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீசைய முறுக்கு 2 திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.