சூர்யா படத்தில் ஏமாற்றி அப்படி நடிக்க வெச்சாங்க! சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகை

Suriya Serials
By Edward Jul 04, 2022 12:30 PM GMT
Edward

Edward

Report

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல்கள் அந்த காலத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி 2202 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் மெட்டி ஒலி. திருமுருகன் இயக்கத்தில் பல முன்னணி சீரியல் நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டது.

சீரியல் டூ சிங்கம்

இந்த சீரியலில் அம்மி மிதுத்து என்ற பாடல் மிகப்பெரியளவில் பலரால் ரசிக்கப்பட்டது. அந்த பாடலில் டான்ஸராக ஆடி பிரபலமானவர்களில் ஒருவர் வனஜா. சீரியலில் முக்கிய ரோலில் நடித்தும் வந்த வனஜா ஒருசில படங்களில் நடித்தும் உள்ளார். அப்படி நடிகர் சூர்யா ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் படத்தில் விலைமாது பெண்ணாக வனஜா நடித்திருந்தார்.

அந்த காட்சியில் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டார். அந்த படத்தில் ஏண்டா நடித்தோன்று என்று எனக்கு தோன்றியது. பலர் இதை பார்த்து உனக்கு இந்த வேலை ஏன் என்று கேட்டும் வந்தார்கள். கணவர் அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதால் என்னை அப்படத்தில் நடிக்க வைத்தார்கள்.

அப்போது எனக்கு கல்யாணம் ஆகவில்லை. ஷூட் நடக்கும் சமயத்தில் எனக்கு பான் பராக் கொடுத்து அதை போட சொன்னார்கள். ஆனால் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. பின் என் அப்பா சமாதானம் செய்தார்.

வறுபுறுத்தி நடிக்க வைத்தார்கள்

அதன்பின் படத்தில் புடவை எல்லாம் கழட்ட சொன்னார்கள். அதற்கும் நான் மறுப்பு தெரிவித்தேன். எப்படியோ அந்த காட்சியில் நான் நடித்து முடித்துவிட்டேன். அடுத்த நாளே அப்போதைய உதவி இயக்குனராக இருந்த என் கணவருக்கும் எனக்கும் சண்டை வந்தது. ஆனால் மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு இந்த காட்சி தான் எனக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்தது என்று கூறியிருந்தார்.

Gallery