நான் பண்ணதுக்கு செருப்பால் அடித்துவிட்டார் எம்ஜிஆர்!! கூனிக்குறுகி உணர்ச்சிவசப்பட்ட கவிஞர் கண்ணதாசன்..
தமிழ் சினிமாவில் 50, 60களில் மிகப்பெரிய கவிஞராகவும் பலவிதமான பாடல்களை பல சூழ்நிலைகளுக்கு ஏற்ப காதல், சோகம், தாலாட்டு, விரக்தி, வீரம் உள்ளிட்ட அனைத்து இசைக்கு ஏற்ப வரிகளை கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன். எம் எஸ் விஸ்வநாதனின் இசைக்கு பல நூறு பாடல்கலை கொடுத்து எழுத்தாளராக திகழ்ந்து தற்போது வரை மெய்சிலிர்க்க வைத்து வருபவர் கண்ணதாசன்.
எம்ஜிஆர்
அப்படி இருந்த கண்ணதாசன் தன் குடும்பத்தினரிடம், எம்ஜிஆர் அவர்களுக்கு நான் செய்த செயலை பற்றி பகிர்ந்துள்ளார். அப்போதைய காலக்கட்டத்தில் காமராஜர் அவர்கள்ன் கட்சியான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கண்ணதாசன் இருந்தார். அந்தசமயம் தான் காங்கிரஸை வீழ்த்தி திமுக கட்சி அதாவது அண்ணா அவர்கள் ஆட்சியை பிடித்தார்.
திராவிட அரசியலில் எம்ஜிஆர் ஆதரவாக இருந்து பல மேடைகளில் பேசினார். அப்போது எம்ஜிஆரை பல அரசியல் மேடைகளில் விமர்சித்து கண்ணதாசன் பேசியிருக்கிறார். இதனால் கண்ணதாசனை தன் படங்களில் இருந்து தூக்கிவிட்டு கவிஞர் வாலியை சேர்த்து வந்தார். தனது ஆஸ்தான பாடலாசிரியராக வாலி எம்ஜிஆருக்கு மாறிப்போனார். அதன்பின் திமுக கட்சியில் இருந்து அதிமுக என்ற கட்சியை புதிதாக துவங்கி முதல்வர் பதவியிலும் அமர்ந்தார் எம்ஜிஆர்.
அரசவை கவிஞர்
அப்போது எவ்வளவு தான் தன்னை பற்றி விமர்சித்து பேசிய கண்ணதாசனை தான் அரசவை கவிஞராக கண்ணதாசனை நியமித்தார் எம்ஜிஆர் அவர்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் வாலியை நியமிக்காமல், கண்ணதாசனின் தமிழ் மீதும் திறமை மீதும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பதால் அவரை நியமித்திருக்கிறார்.
இதனால் தான் தனது குடும்பத்தினரிடம் எம்ஜிஆர் என்னை செருப்பால் அடுத்துவிட்டார். விமர்சித்து பேசியிருந்தும் அரசவை கவிஞராக என்னை நியமித்திருக்கிறார். நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை முதல்வராக தான் இருப்பார் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தாராம்.
அதன்பின் எம்ஜிஆர் 3 முறை முதல்வராக பதவியில் இருந்தும் மரணத்தின் போது முதல்வராகவே மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை கண்ணதாசனின் மகள் விசாலி ஒரு மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.