18 வயது பெண்ணை நாசமாக்கிய மைக் டைசன்! செஞ்ச தாப்பாலே வாழ்க்கையை தொலைச்சிட்டாரே..

liger vijaydevarakonda mike tyson
By Edward Apr 03, 2022 09:30 AM GMT
Report

உலகத்தில் பலர் தன்னுடைய மோசமான மனநிலையால் செய்யும் தவறுகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதனால் ஒரு நாழிகையில் இறக்கிவிட்டு விடும். அப்படி மிகப்பெரிய மைல்கல்லை தொட்டவர் மைக் டைசன்.

குத்துச்சண்டை உலகில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் தான் செய்த செயல்களால் வாழ்க்கையையே தொலைத்துவிட்டார். சர்ச்சைகளுகு பேர் போனவர் என்ற பெயர் வர போதை பெண் அடிமை கோபம் என்ற காரணங்கள் தான்.

குத்துச்சண்டை உலகில் அசைக்க முடியாத மன்னனாக இருந்த டைசன், தனது மனைவி தொடுக்க இருந்த விவகாரத்தில் இருந்து ஆக்ரோஷமாக மாறினார். அதன் பின்னர் யாரும் எதிர்பாரா வண்ணம் 1990ம் ஆண்டு ஜப்பானில் நடந்த போட்டியில் டக்ளஸிலிடம் வீழ்ந்தார்.

1991ல் 18 வயது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வந்ததும் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சக போட்டியாளர் ஹோலி பீல்டின் காதை கடித்து சர்ச்சயில் சிக்கினார்.

2007ஆம் ஆண்டு கொகைன் பயன்படுத்திய குற்றத்திற்காக 24மணிநேரம் ஜெயில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்தார். தொலைக்காட்சிகளில் அதிகம் பங்கு பெற்ற அவர், 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஹங்கோவர் திரைபடத்தில் மைக் டைசன் ஆகவே நடித்தார்.

அமெரிக்க ஊடகத்திற்கு அவர் கொடுத்த பேட்டியில் என் வாழ்க்கை வேஸ்ட் நான் வாழ்கையில் தோற்றவன் என்று கூறியிருந்தார். தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லிகர் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.