என்னை தூக்கி எறிஞ்சிட்டு வேறொருத்தி கூட இருக்காங்க! உண்மையை உடைத்த நடிகை ஷகிலாவின் மகள்
மலையாள சினிமாவின் க்ளாமர் குயினாக இருந்து பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ஷகிலா. குடும்ப சூழ்நிலையால் அந்தமாதிரி படங்களில் நடிக்க ஆரம்பித்த ஷகிலா தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் நல்ல ஒரு இடத்தினை மக்கள் மனதில் பெற்றார்.
திருமணமே செய்யாமல் தனிமையில் இருந்த ஷகிலா மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்ந்து வந்தார். அவரை குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அறிமுகப்படுத்தி பெருமைபடுத்தினார்.
இருவரும் சேர்ந்து கடந்த ஆண்டு யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என ஆரம்பித்து பிஸியாக இருந்த நிலையில் மிளாவிற்கும் ஷகிலாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அதற்கு காரணம் மற்றொரு திருநங்கை தான் என்று மிளா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தன்னுடைய சுய நலத்திற்காக ஷகிலா அம்மாவை பயன்படுத்திக்கொள்கிறார் ஷாஷா என்கிற திருநங்கை. என் அம்மாவிடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஷாஷா டெலீட் செய்திருக்கிறார்.
இதுபற்றி ஷகிலா அம்மாவிடம் கேட்டால் எனக்கு தெரியாது என்று மழுப்பி பேசிவிடுகிறார். ஷகிலா அம்மா மீது எப்போதும் எனக்கு பாசமும் மரியாதையும் இருக்கும் என்று கண்கலங்கியபடி மிளா பேசியுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..