இது கன்னமா இல்ல சாலையா? நடிகைகளை டார்க்கெட் செய்யும் அரசியல் பிரமுகர்கள்!

minister katrinakaif hema malini Gulabrao-Patil
By Edward Dec 20, 2021 01:45 PM GMT
Report

பெரும்பாலும் எந்த நிகழ்ச்சிகள் எடுத்தாலும் நடிகைகளை பற்றி ஏதாவது ஒன்று பேசுவது வழக்கமாகிவிட்டது. அப்படி நடிகைகளை ஓப்பிட்டும் அவர்களின் உடல் அமைப்பை கொண்டும் உதாரணமாக பலர் மேடைகளில் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்துவார்கள்.

அப்படி சமீபத்தில் நடிகை கேத்ரீனா கைஃபின் கன்னத்தை போன்று சாலைகள் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி கண்டனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

அப்போது தனது தொகுதிகளில் இருக்கும் சாலைகள் நடிகை ஹேம மாலினியின் மொழுமொழுவென இருக்கும் கன்னத்தை போன்று இருக்கும் என்றும் அப்படி இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ஏக்நாட் காத்சேவுக்கு சவால் விட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை கேள்விப்பட்ட நடிகையும் எம்பியுமான ஹேம மாலினி பல ஆண்டுகளுக்கு முன் லாலு பிரசாத் யாதவ் செய்ததை பலரும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் மலிவான ரசனை கொண்டவை என்று பதிலடி கொடுத்துள்ளார், ஹேம மாலினி.