புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள மிர்ச்சி செந்தில்- பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களும் உள்ளார்களா?
மிர்ச்சி செந்தில்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு தொடர்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.
அவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக அமைய இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள். திருமணத்திற்கு பின் பல வருடம் கழித்து இருவருக்கும் குழந்தையும் பிறந்துள்ளது.
கடைசியாக மிர்ச்சி செந்தில் விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் 2ம் பாகத்தில் நடித்திருந்தார், தொடர் எப்போதோ முடிந்துவிட்டது.

புதிய தொடர்
இந்த நிலையில் தான் அவர் புதிய தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த முறை அவர் ஜீ தமிழில் நடிக்கிறாராம், அண்ணன்-தங்கைகள் கொண்ட கதையாம். நாயகியாக நித்யா ராம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் அமிர்தா மற்றும் ரோசரி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம்.
நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் என வைத்திருந்தாரா?- இத்தனை தொழில் கவனித்தாரா?