நயன்தாராவிற்கு ஜோடியா மிர்ச்சி சிவா.. அதுவும் எந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா

Nayanthara Vignesh Shivan
By Kathick Jun 15, 2022 01:53 AM GMT
Report

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் நயன்தாரா, சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் - நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் நடிப்பதாக இருந்தது விஜய் சேதுபதி கிடையாதாம்.

மிர்ச்சி சிவா தான், இப்படத்திற்கு முதலில் ஹீரோவாக நடிக்க தேர்வுசெய்தாராம் விக்னேஷ் சிவன். அவரிடம் கதையை கூறியும், இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். இதனை ஒரு விருது வழங்கும் விழா மேடையில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.