அலிபாயிடம் வலிமை அப்டேட்! இப்படியும் பிரமோஷன் செய்வாரா அஜித்...

valimai csk ipl valimaiupdate moeenali alibhai
By Jai Feb 24, 2022 12:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் தான் நடிகர் அஜித்தின் வலிமை. கடந்த ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் என்று கதறியபடி கேட்டு வந்தனர். எப்போது அஜித்தை திரையில் காண்போம் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்து வந்தனர்.

அப்படி ஐபிஎல்-லின் சென்னை அணி வீரரும் இங்கிலாந்து நாட்டு வீரருமான மோயின் அலியிடம் பல முறை அலிபாய் ’வலிமை அப்டேட்’ என்று கேட்டு கொண்டே வந்தனர். அப்படி என்ன தான் கேட்கிறார்கள் என்று மோயின் அலி குழப்பத்தில் தமிழ் பேசும் வீரர்களுடன் கேட்டு தெரிந்து கொண்டாராம்.

நாளை வலிமை படம் வெளியாகும் நிலையில் மோயின் அலி வலிமை அப்டேட் பற்றி வீடியோவில் தெரிவித்துள்ளார். இதற்கு பலர் இப்படியும் பிரமோஷன் செய்வாங்களா என்று கதறி வருகிறார்கள்.