எல்லாத்தையும் இழந்துவிட்டேன்..முகமதி ஷமியின் முன்னாள் மனைவிக்கு கிடைத்த வெற்றி..
முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது மனைவி ஹசின் ஜஹானிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அவர்களின் பராமரிப்புத்தொகையாக மாதம் ரூ. 4 லட்சம் வழங்க கொல்கத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஹசினுக்கு மாதம் ரூ. 1.2 லட்சமும், ஷமியின் மகளுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளனர்.
ஷமி வருவாய் அவரது மகளின் எதிர்காலம் மற்றும் இருவரும் பிரிவதற்கு முன் அவரது பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் அனுபவித்த வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தொகை தீர்மானிக்கப்பட்டதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்திரவை இறுதி செய்ததற்காக ஹசின் ஜஹான் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஹசின் ஜஹான்
அவர் அளித்த பேட்டியில், கடந்த 7 ஆண்டுகளாக எனது உரிமைகளுக்காக போராடி, கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துவிட்டேன். என் மகளை சிறந்த பள்ளியில் சேர்க்க முடியவில்லை, நீதிமன்றத்திற்கு நன்றி என்று கூறியிருக்கிறார் ஹசின் ஜஹான்.