பிக்பாஸ் வீடா அந்தமாதிரி வீடா? பிக்பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்..
பிக் பாஸ் 9
16+ ஷோவாக இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் பார்க்கும்போது கூடவே சேர்ந்து குழந்தைகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கு முன் வெளியான 7 சீசன்களையும் குழந்தைகள் அதிகளவில் பார்த்தும் வருகிறார்கள். கமல்ஹாசனையே பிக்பாஸ் என்றே குழந்தைகள் அழைத்து வந்ததை பார்த்திருக்கிறோம்.
தற்போதைய பிக்பாஸில் பெண் போட்டியாளர்களே மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் விஜய் சேதுபதி தனது மகளை முதலில் இந்த ஷோவை பார்க்க அனுமதிப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிக்பாஸ் வீடா இல்ல ஆபாச வீட்டா என்ற அடைமொழியுடன் விமர்சித்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.
முத்தம் கொடுப்பது, கட்டியணைப்பதை தாண்டி கண்ட இடங்களில் கை செல்வது, அடிக்கடி மாப் போடுவியா, ரொம்ப பசிக்குது, மிட் நைட்ல சாப்டுவியா என ஆதிரை, அரோரா, எஃப்ஜே, கம்ரூதின் உள்ளிட்ட பலர் ஆபாச பேச்சுக்களையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி இளைஞர்களின் மனதை ரொம்பவே கெடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
