மன உளைச்சலால் தற்கொலை முயற்சி!! Cheer Leader ஆல் தலை கீழான முகமது ஷமியின் வாழ்க்கை!!
இந்தியா முழுவதும் தற்போது அதிகமாக புகழுக்கு ஆளாகி இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி. உலக கோப்பை அரையிறுதி போட்டியில் ஒரே ஆளாக இருந்து 7 விக்கெட்டை கைப்பற்றி இந்தியா வெற்றிப்பெற காரணமாக அமைந்தார் ஷமி. அவரை இந்த உலகமே தற்போது உச்சத்தில் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால், ஷமி நேரடியாக இந்திய அணியின் 11 வீரர்கள் லிஸ்ட்டில் இல்லை என்பது தான் உண்மை. ஹார்திக் பாண்டியா வெளியேற, சர்துல் தாகூர் சொதப்பி வந்ததால் ஒரு சாய்ஸ் கொடுத்து உள்ளே சேர்க்கப்பட்டார் ஷமி. ஆடிய முதல் ஆட்டத்திலேயே மிகப்பெரிய விக்கெட்டை கைப்பற்றி 6 போட்டியில் 22 விக்கெட்டை கைப்பற்றி தன் திறமையை நிரூபித்தார். அப்படி ஷமி இதற்கு முன்பு ஒதுக்கப்பட காரணம் என்ன என்று பிரபல ஆர் ஜே ஷா விளக்கியுள்ளார்.
ஆரம்பத்தில் பெங்கால் அணியில் ஆட ஆரம்பிக்க கங்குலி உதவினார். அதன்பின் 2014ல் ஒரு Cheer Leader ஹசின் ஜஹான் என்பவரை பார்த்து அவரை திருமணம் செய்தார் ஷமி. திருமணத்தின் போது ஹசின் ஜஹான் இரு பெண் குழந்தைகளுடன் வருகிறார்கள். அது தன் அக்கா குழந்தை என்று கூறியிருக்கிறார். அதன்பின் சில ஆண்டுகள் செல்ல குழந்தை பெற்றப்பின் ஷமிக்கு ஒரு உண்மை தெரிய வந்துள்ளது.
அந்த இரு குழந்தைகள் ஹசின் ஜஹான்-க்கு வேறொருவருடன் பிறந்த குழந்தை என்று தெரியவந்துள்ளது. இந்த விசயத்தை ஹசின் ஜஹானின் முதல் கணவர் வந்து தான் கூறியிருக்கிறாராம்.
இதனால் பிரச்சனை வர, கோர்ட்டுக்கு சென்று ஷமி மீது புகார் அளித்தும், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் மேட்ச் ஃபிக்ஸிங் ஈடுபடுகிறார் என்ற குண்டையும் போட்டுள்ளார்.
இதனால் விளையாட வாய்ப்பில்லாமல் இருக்க சரியான உண்மையை கூறி அதிலிருந்து மீண்டு வந்தார் ஷமீ. அவர் மீது நம்பிக்கை கொண்டு தான் பிசிசிஐ மீண்டும் ஷமியை இந்திய அணியில் சேர்த்து தற்போது இந்திய அணியின் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் என்று ஆர் ஜே ஷா உண்மையை பகிர்ந்திருக்கிறார்.