சானியா மிர்சாவை இரண்டாம் திருமணம் செய்கிறாரா முகமது ஷமி.. உறுதிப்படுத்திய தகவல்!!
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010 ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை இருக்கிறது.
சமீபத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்று தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது. உண்மையில் அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.
இருப்பினும் சானியா மிர்சா, முகமது ஷமி திருமணம் செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவியது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய முகமது ஷமி, சமூக வலைத்தளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படி பொய்யான செய்திகளை பரப்புவதற்கு பதிலாக வாழ்க்கையில் வெற்றியடைய முயற்சி செய்யுங்கள். மக்களுக்கு உதவுங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.