எம்புரான் - ஒர்த்-ஆ? ஒர்த் இல்லையா? வெளியான ரசிகர்கள் விமர்சனம்..

Mohanlal Prithviraj Tamil Movie Review L2: Empuraan
By Edward Mar 27, 2025 06:30 AM GMT
Report

எல்2 எம்புரான்

மலையாள சினிமாவில் 5 ஆண்டுகளுக்கு முன் பிருத்விராஜ் சுகுமார் இயக்கத்தில், மோகன் லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் லூசிபர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பிருத்விராஜ் இயக்கத்தில் எல்2 எம்புரான் என்ற டைட்டிலில் இன்று மார்ச் 27 ஆம் தேதி பான் இந்தியன் படமாக உருவாகி ரிலீஸாகியுள்ளது.

எம்புரான் - ஒர்த்-ஆ? ஒர்த் இல்லையா? வெளியான ரசிகர்கள் விமர்சனம்.. | Mohanlal Prithviraj L2 Empuraan Twitter Review

மோகன் லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், பிருத்விராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் ரிலீஸாகி உலகளவில் அதிக வசூல் செய்யும் எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாள் வசூலில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

பொலிடிக்கர் திரில்லர் படமான எல்2 எம்புரான் படம் உருவாகி படத்தை பார்த்த ரசிகர்கள் சில கருத்துக்களை கூறியும் பாராட்டியும் வருகிறார்கள்.

ரசிகர்கள் விமர்சனம்

அதில், டிரைலரில் காட்டியது போலவே படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாகவும் ஆனால் காட்சிகள் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆக்ஷன் காட்சிகளும் கவர்ச்சிகரமாக உள்ளது.

எம்புரான் - ஒர்த்-ஆ? ஒர்த் இல்லையா? வெளியான ரசிகர்கள் விமர்சனம்.. | Mohanlal Prithviraj L2 Empuraan Twitter Review

விஷுவல்ஸ் மிகவும் பிரமாண்டமாகவும் பான் இந்திய திரைப்படத்திற்கு தேவையான அனைத்து தோற்றத்தை இயக்குநர் பிருத்விராஜ் கொண்டு வந்துள்ளார். எல்2 எம்புரான் படத்தில் கிளைமேக்ஸ் வடிவமைப்பு அற்புதமாக இருப்பதாகவும் எலிவேஷன் காட்சிகள் சூப்பராக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

டோவினோ தாமஸ், மஞ்சுவாரியர் நடிப்பு சிறப்பு என்றும் ஒரு பான் இந்திய வெளியீடு என்பதால் பிருத்விராஜ் இந்த படத்தில் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு பிடிக்கும் விஷயங்களை சேர்ந்துள்ளார் என்றும் கூறி வருகிறார்கள்.

எம்புரான் - ஒர்த்-ஆ? ஒர்த் இல்லையா? வெளியான ரசிகர்கள் விமர்சனம்.. | Mohanlal Prithviraj L2 Empuraan Twitter Review

மேலும் படத்தில் பின்னணி இசையில் தீபக் தேவ், காட்சிகளுக்கு ஏற்ப உயர்த்தி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். படத்தின் கதை முதல் பாதி கதை கொஞ்சம் மெதுவாக தொடங்குகிறது தான் குறை.

மலையாளத்துடன் மற்ற மொழிகளிலும் இந்த படம் பார்வையாளர்களை கவர்ந்தால் மிகப்பெரிய பான் இந்திய பிளாக்பஸ்டர் படமாக மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

மேலும், ஒருசிலர் கலவையான விமர்சனங்களை கூறியும் வருவது குறிப்பிடத்தக்கது.