உன்ன மாதிரி ஆள்கூட 12 வருஷம் வாழ்ந்தேன் பாரு? இமானை அசிங்கப்படுத்திய முதல் மனைவி..

D Imman
By Edward May 18, 2022 11:25 AM GMT
Edward

Edward

Report

பிரபல இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருபவர் டி இமான். சில மாதங்களுக்கு முன் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் ஒருசில மாதங்கள் பிரபலத்தின் மகளை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

சில நாட்களுக்கு முன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இமான் மனைவியின் பெண் குழந்தையை தன் மகளாக ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தன் இரு மகள்களுக்காக முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது பொய் வழக்கு ஒன்றினை போட்டு சர்ச்சைக்குள்ளானார்.

இமான் போட்டிருப்பது பொய்யான வழக்கு என முன்னாள் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்து இருக்கிறார். குழந்தைகளை கஸ்டடி வைத்திருக்கும் மோனிகாவுக்கு தான் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற உரிமை இருக்கிறது.

அவர் இமானிடம் குழந்தைகள் பாஸ்போர்ட் தருமாறு கேட்டபோது அவை வீடு மாறும்போது தொலைந்துவிட்டது என கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தான் மோனிகா விதிமுறைகள் படி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருக்கிறார்.

இந்த நேரத்தில் தான் இமான் மோனிகா மீதும் பாஸ்போர்ட் அதிகாரிகள் மீதும் பொய்யான வழக்கு போட்டிருக்கிறார். குழந்தைகள் பாஸ்போர்ட் வைத்திருக்க இமானுக்கு சட்டப்படி உரிமை இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டனர்.

மோனிகாவுக்கு இமான் எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை, குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டும் 5000 ருபாய் தருகிறாராம்.

இந்நிலையில் இரண்டாம் கல்யாணம் செய்த டி இமானுக்கு வாழ்த்துக்கள். 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த ஒருவரை உடனே மாற்ரிவிட முடியும் என்றால் உன்னை மாதிரி ஒரு ஆளுடன் 12 ஆண்டுகள் வாழ்ந்தேன் பாரு நான் தான் முட்டாள்.

2 வருடமாக சொந்த மகள்களை பார்க்கவோ கவனிக்கவோ இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலாக ஒரு மகளை தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய குழந்தைகளை எப்படி பாதுகாப்பேன் உங்களிடமிருந்து.

தேவைப்பட்டால் புது மகளையும் உங்களிடமிருந்து பாதுகாப்பேன். திருமணத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறி பதிவினை பகிர்ந்துள்ளார்.