தயாரிப்பாளரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த சீமாராஜா!! சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் இவ்வளவா?
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
3, மெரினா போன்ற படங்களில் நடித்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர அவரின் திறமையும் அவர் நடித்த வெற்றிப்படங்களும் தான் காரணம்.

ஆனால் இடையில் வளர்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்ததோடு தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்த படமாக இருந்தது சீமராஜா.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக சுமார் 18 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.
படம் தோல்வியை தழுவினாலும் அந்த நஷ்டத்தை அடைக்க சிவாகர்த்திகேயன் ஆர் டி ராஜா தயாரிப்பில் அயலான் படத்தினை நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
பல கஷ்டங்களுக்கு மத்தியில் வரும் தீபாவளிக்கு அயலான் படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.