என் குடும்பமே எனக்கு எதிராக இருந்தாங்க..6 மாசமாச்சு!! சிவகார்த்திகேயன் பட நடிகை உருக்கம்
பாக்யஸ்ரீ போர்ஸ்
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்தான் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். சமீபத்தில் வெளியான லெனின் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பாக்யஸ்ரீ, தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பாக்யஸ்ரீ அளித்த பேட்டியொன்றில், நடிக்க வரும்போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
என் குடும்பமே
அதில், நான் நடிக்கப் போவதாக என் குடும்பத்தில் சொன்னதும் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. என் அம்மாவிடம் பேசியபோது முடியாது என்றார்.
அப்பாவிடம் கேட்டால், அம்மா வேண்டாம் என்கிறாளே என்றார். என் சகோதரியாவது ஆதரவு தருவாள் என்று நினைத்தால் அவளும் வேண்டாம் என்றாள்.
அனைவரும் எனக்கு எதிராகவே இருந்தனர். ஆனால், என் கனவை நான் கைவிட விரும்பவில்லை, அப்போது என் அம்மா என்னை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்துவிட்டார்.

சுமார் 6 மாதங்கள் என்னிடம் பேசவே இல்லை. என் அம்மா என்னை ஒருநாள் நிச்சயம் பெருமையாக நினைப்பார் என்ற ஒற்றை நம்பிக்கையில் மட்டுமே முன்னோக்கி நகர்ந்தேன் என்று பாக்யஸ்ரீ போர்ஸ் உருக்கமாக பேசியுள்ளார்.