இரயில் விபத்தில் இறந்த தாய்! நெகிழ்ச்சியான பேச்சிற்கு பிறகு கோடியில் கார் வாங்கிய குக்வித் கோமாளி பிரபலம்

comali cook car pugazh venkatesh
By Jon Mar 26, 2021 06:57 PM GMT
Report

தொலைக்காட்சி சேனல்கள் தற்போது விதவிதமாக ரியாலிட்டி ஷோக்களை நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒளிப்பரப்பு செய்து பிரம்மாண்ட ஹிட் கொடுத்து வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி கடந்த இரு ஆண்டுகளாக ஒளிப்பாரப்பாகி வரும் நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் உள்ளிட்ட பலர் இருந்து சிரிக்க வைத்து வருகிறார்கள்.

அந்தவகையில் க் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் என்ன சேட்டை செய்தாலும் அதை விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும் போட்டியின் நடுவர்கள்கூட ரசிகர்களின் பேவரைட் தான். நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார். பலரை தன்னுடைய பயிற்சியால் முன்னேற்றி விட்ட இரு நடுவர்களும் பல கஷ்டங்களை சந்தித்து பெரிய இடத்தினை பெற்றனர்.

அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன் பவித்ரா வெளியேறி போது வெங்கடேஷ் பட் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வரலாம். அது எனக்கும் வந்தது. நான் வெறும் 9வது தான் படித்திருக்கிறேன். பின் கேட்ரிங் படிப்பை முடித்துவிட்டு என்னுடைய முதல் ஷோ வரும் போது என்னுடைய அம்மா ரயில் விபத்தில் இருந்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதை வாங்கியது தர்ஷன், புகழ் உள்ளிட்ட குக் வித் கோமாளி பிரபலங்களை கூட்டி கொண்டு ஒரு ரைட் சென்றுள்ளார்கள்.