என் மூஞ்சில முழிக்காத! காலில் விழுந்து கெஞ்சும் மெளனராகம் சத்யாவின் அடுத்து நடக்கயிருப்பது இதுதான்..

serial television raveenadaha mounaraagam
By Edward Aug 23, 2021 03:23 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மனதை ஈர்த்து வரும் சீரியல் மெளனராகம். குழந்தை பருவத்தை மையமாக வைத்து எடுத்த மெளனராகம் சீரியல் தற்போது இரண்டாம் சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

நடிகை ரவீனா தாஹா முன்னணி நடிகையாக நடித்து வரும் இந்த சீரியலில் அம்மாவிற்கு தெரியாமல் வருணை திருமணம் செய்துள்ளார். அம்மாவிற்கு தெரியாமல் இங்கும் அங்கும் மாறிமாறி சென்று சமாளித்து வரும் சத்யா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற ஆவல் இருந்து வந்துள்ளது. தற்போது சீரியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் பிரமோ விடீயோ வெளியாகியுள்ளது.

அதில் சத்யா கழுத்தில் இருக்கும் தாலியை அம்மா பார்த்து ஷாக்காகியுள்ளார். வருணை சித்தி அங்கு வந்து நடந்ததை கூறியுள்ளார். அதனால் அதிர்ச்சியான சத்யாவின் தாய் என் மூஞ்சில முழுக்காத. அம்மானு கூப்பிடாத என்று கூறி கிளம்பிவிடுகிறார். சத்யா காலில் விழுந்தும் கூட சம்மதிக்காத அவரின் அம்மா எங்கு செல்வார் சத்யா அடுத்து என்ன செய்வார் என்று இந்த வார எபிசோட்டில் தெரியவரும்.