அந்த நடிகருடன் நடிக்க ஒரு நைட் தங்க சொன்னாங்க!.. பிரபல நடிகை பகிர் தகவல்
சினிமாவில் பல நடிகைகள் அவர்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் பிரபல இந்தி நடிகை மிருணாள் நேவெல் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார்.
அதில் அவர், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கொடுமையை சின்ன நடிகைகள் முதல் பெரிய நடிகைகள் வரை கடந்த வந்து இருக்கிறார்கள். அந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கிறது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போது ஏஜென்ட் ஒருவர் என்னிடம், நீங்கள் இந்த விளம்பரத்தில் நடிக்க தேர்வு ஆகி இருக்கிறீர்கள்.
கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறினார். ஆனால் அடுத்த நாள் எனக்கு குறும் செய்தி வந்து இருந்தது அதில், நீங்கள் இந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்றால் இரவு தங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இன்னும் சம்பவம் மனதில் இருக்கிறது என்று மிருணாள் நேவெல் கூறியுள்ளார்.