தனுஷுடன் பிப்ரவரி 14ல் திருமணமா? மிருணாள் தாகூர் கொடுத்த விளக்கம்..
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என்று கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் தனுஷ், தற்போது கர என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின் பல படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ள தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை ரகசியமாக காதலித்து வருவதாகவும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இரு தரப்பில் இருந்து ஏதும் கூறாத நிலையில் மிருணாள் தாகூர் தான் நடித்து பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ள Do Deewane सहर Mein படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தனுஷுடன் காதல் திருமணம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டதற்கு தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூர் கொடுத்த விளக்கம்
அதில், நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேனா? இல்லவே இல்லை. பிப்ரவரி 14 ஆம் தேதி ஏப்ரல் 1ஆம் தேதி மாதிரி Fools டேவாக மாறியிருக்கிறது. எனக்கு திருமணம் என்று யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.
இது இப்போது ரொம்பவே பயம் ஏற்படுத்துவதாக இருக்கிறது, நான் எங்கும் சொல்லவே இல்லையே என்று மிருணாள் தாகூர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.