பிரபல நடிகையை கட்டிப்பிடித்து எமோஷனல் ஆன நடிகை மிருணாள்!! வைரல் வீடியோ..
மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர்.
பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.

இதனையடுத்து பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
அந்நிகழ்ச்சியின் போது நடிகை மிருணாள் தாகூர் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவை எமோஷனல் வார்த்தையில் பேசி, இறுக்கமாக கட்டியணைத்திருக்கிறார். ஏன் இப்படி மிருணால் செய்தார் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.