கோடியில் புறளும் சீதா!! அந்த விசயத்தில் சமந்தா, ராஷ்மிகாவை ஓரங்கட்டித் தூக்கிய நடிகை மிருணாள்..
மராத்தி சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணால் தாகூர். கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் சென்சேஷ்னல் நடிகையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் மிருணாள்.
இப்படத்தில் அடக்கவுடக்கமான ராணி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள், ரியல் வாழ்க்கையில் ஒரு மாடலாக திகழ்ந்து வருகிறார்.

கிளாமர் உச்சக்கட்டத்தை எகிரவைத்து வரும் மிருணாள் சமீபத்தில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
இந்நிலையில், பல மொழிகளில் நடித்து வரும் மிருணாள் தெலுங்கு நடிகர் நானியின் 30வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.
அப்படத்தில் நடிக்க மிருணாள் தாகூருக்கு சுமார் 6 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கவுள்ளார்களாம்.

இதுவரை தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்ட்டில் நடிகை நயன் தாரா 10 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்து நடிகை சமந்தா இருக்கும் நிலையில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் மிருணாள் தாகூர் இடம் பெற்றிருக்கிறார்.
ராஷ்மிகா, திரிஷா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளை சம்பள விசயத்தில் மிருணாள் தாகூர் ஒரே ஒரு படத்தின் மூலம் ஓரங்கட்டி இருக்கிறார்.