கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.. Gen-Z-கிட்ட கத்துக்கோங்க!! நோஸ்கட் விட்ட நடிகை மிருணாள்..
மிருணாள் தாகூர்
மராத்தி, இந்தி மொழிகளில் திரைப்பயணத்தை தொடங்கி தெலுங்கில் சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வரும் மிருணாள், நடிகர் தனுஷுடன் காதலில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவியது.

இதுகுறித்து மிருணாள், இந்த விஷயத்தில் தனக்கு அதிக விளம்பரம் கிடைத்தது, தனுஷுடன் பணியாற்ற வேண்டு, காதல் எல்லாம் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
Gen-Z-கிட்ட
இதனையடுத்து சில வாரங்களாக இந்திய கிரிக்கெட் வீரர் யெஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாக கூறி செய்திகள் பாலிவுட்டில் பரவி வருகிறது. தற்போது டேட்டுங் குறித்து அதிரடி விளக்கத்தை கொடுத்துள்ளார் முருளாள் தாகூர்.
அதில், கொஞ்சம் ரொலாக்ஸாகுங்கள் ப்ரோ. நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் இடத்தை காட்டுங்கள், எப்படி இப்படியெல்லாம்? படித்தவர்களாக இருப்பவர்களே வதந்திகளை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.

நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கிறது. Gen-Z-யிடமிருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். சரியான பிரச்சனைகள் குறித்து வீடியோகளை உருவாக்கினாலே அதிகமான வியூஸ்கள் கிடைக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார் மிருணாள் தாகூர்.